செய்திகள் :

எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!

post image

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது.

இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.

அண்மையில், இப்படத்தின் புரோமோ பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. சிம்பு நடந்து வருவது போன்ற காட்சி இப்படம் வடசென்னை திரைப்படத்தை மையப்படுத்தி உருவாகி வருவதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இறுதியாக, சிம்பு நடித்த காளை திரைப்படத்திற்கு ஜிவி இசையமைத்திருந்தார். தற்போது, 17 ஆண்டுகள் கழித்து இக்கூட்டணி இணைகிறது.

இதையும் படிக்க: கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?

gv prakash singup with silambarasan and vetri maaran new movie

அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெ... மேலும் பார்க்க

இட்லி கடை தனுஷ் போஸ்டர்!

நடிகர் தனுஷின் இட்லி கடை அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்குப் பின் இயக்கி நடித்த இட்லி கடை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன்... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் டிரா: நடப்பு சாம்பியன் ஜப்பானை வெளியேற்றியது இந்தியா!

மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய மகளிரணி 1-1 என டிரா செய்தது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஹாக்கி ஆ... மேலும் பார்க்க

முதல்வர் படத்தில் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நான் தான் சிஎம் என்ற படத்தில் முதல்வர் கதாபா... மேலும் பார்க்க

கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?

நடிகர் ஆமிர் கான் கூறியதாக பரவும் செய்தி போலியானது எனத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர... மேலும் பார்க்க