Vikatan Digital Awards: "‘பொல்லதவன்’ படத்தின்போதே சிம்புவுடன் பேசிக்கிட்டிருந்தே...
நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்
மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்கு சுமார் 5 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே இருந்துள்ளார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:
“பிரதமர் தங்களைப் பார்க்க வருவார் என்று மணிப்பூர் மக்கள் பொறுமையாகக் காத்திருந்தனர். அவரும் இன்று அவர்களைச் சந்திக்கும் சூழலானது, கட்டாயத்தின்பேரில் ஏற்பட்டுவிட்டது.
ஆனால், அவர் மணிப்பூரில், சரியாகச் சொல்ல வேண்டுமானால் தரையிறங்கியதுமுதல் புறப்பட்டது வரை, 5 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருந்தார்.
உலகெங்கிலும் நாள்கணக்கில் சுற்றி பிரசாரம் செய்ய பிரதமருக்கு நேரம் இருக்கிறது(விருப்பமும் உள்ளது). ஆனால், மணிப்பூருக்கு அவர் அளிக்கும் மதிப்பு இவ்வளவுதானா?
இது, உணர்ச்சியற்ற செயல், அதிர்ச்சியும் அளிக்கிறது! காலம் தாழ்த்திச் சென்றிருந்தாலும் சரியானதாக இது அமையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!