நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்
மதராஸி வசூல் எவ்வளவு?
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மணி வசந்த், நடிகர் வித்யுத் ஜமால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் செப் 5 ஆம் தேதி வெளியானது.
பெரிய புரமோஷன் இல்லாததால் முன்பதிவுகளும் எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. இருந்தும், படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும், கதையும் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாள்களில் கவனம் பெற்றது.
முக்கியமாக, நடிகர் வித்யூத் ஜமாலின் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. இந்த நிலையில், மதராஸி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 65 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு விமர்சன ரீதியாக இப்படம் வெற்றியைக் கொடுத்தாலும் பட்ஜெட்டை கணக்கிட்டால் வணிக ரீதியாக குறைவாகவே வசூலித்திருக்கிறது.
இதையும் படிக்க: அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!