செய்திகள் :

கமல்ஹாசனுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா இசை! இளையராஜாவுக்கு ரஜினி புகழாரம்!

post image

இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு திரைத்துறை பயணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,

``நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் - இளையராஜா. உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் ரத்தம், நாடி, உயிரிலும் இளையராஜாவின் இசை கலந்துள்ளது. 50 வருடங்களில் 1600 படங்கள், 800 பாடல்கள் என்பது சாதாரண விஷயமல்ல.

எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் என்று சொல்வார். ஆனால், கமலஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா. சகோதரருக்கு சிந்தாத கண்ணீர், மனைவிக்கு சிந்தாத கண்ணீர், மகளுக்கு சிந்தாத கண்ணீர், நண்பர் எஸ்.பி.பி.க்கு சிந்தியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, கார்த்தி உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!

Ilaiyaraaja completes 50 years in industry

நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்

அரியலூர்: வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள ... மேலும் பார்க்க

ஜனநாயகப் படுகொலைச் செய்யும் பாஜக! -அரியலூரில் விஜய்

அரியலூர்: வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, ’ஜனநாயகப் படுகொலைச் செய்கிறது பாஜக!' என்று குறிப்பிட்டார். இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த... மேலும் பார்க்க

அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு! -அரியலூரில் விஜய்

அரியலூர்: “அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு!” என்று அரியலூரில் மக்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசினார். திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜ... மேலும் பார்க்க

விஜய் அரியலூர் செல்வதில் தாமதம்!

அரியலூர்: திருச்சியில் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்ட பின், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அரியலூர் வந்தடைந்தார். எனினும், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் செல்வதற்கு ... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு! முதல்வர் வாழ்த்து!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,இந்த... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப... மேலும் பார்க்க