நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்
இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பில் பணியாற்றினார்.
கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஒருமித்த கருத்து இல்லாததால் புதிய செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போன நிலையில் இன்று(செப். 13)நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.