Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்...
இட்லி கடை தனுஷ் போஸ்டர்!
நடிகர் தனுஷின் இட்லி கடை அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்குப் பின் இயக்கி நடித்த இட்லி கடை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், இட்லி கடையில் முருகன் என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளதை அறிமுக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில், நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், சமூத்திரக்கனி, ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், நாளை (செப். 14) இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!