Vikatan Digital Awards 2025 - "பேரன் பேத்திகள்தான் என் உலகம்" - செளமியா அன்புமணி நெகிழ்ச்சி
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Home Cooking Tamil : `Pan இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel | Vikatan Digital Awards 2025
இதில், Best Cooking Channel Tamil பிரிவின் வெற்றியாளராக `Home Cooking Tamil' சேனல் ஹேமா சுப்பிரமணியன் விருதினைப் பெற்றார். செளமியா அன்புமணி விருதினை வழங்கி சிறப்பித்தார்.
விருது வழங்கிய சௌமியா அன்புமணியிடம் `ஒரு சொல், ஒரு பதில்’ என்ற அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளும்... அவர் அளித்த பதில்களும் இங்கே...
அரசியல்?
``நேர்மை.’’
கனவு?
``போதை, மது ஒழிப்புதான் கனவு."
மாம்பழம்?
``மனதுக்குப் பிடித்த பழம்.’’
2026 சட்டமன்றத் தேர்தல்?
``நேர்மைக்கும், சிறந்த தலைமைப் பண்புக்கும் கிடைக்கப்போகும் வெற்றி."

பேரன் பேத்திகள்தான் என் உலகம் !
தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது நிறைய தேர்தல் வேலைகள் இருந்தன. அப்போது நான் சோர்வாகி வீட்டுக்கு வரும்போதெல்லாம் என்னுடைய பேரன், பேத்திகள்தான் எனக்கான எனர்ஜியையும், மகிழ்ச்சியையும் மீட்டுத் தருவார்கள். அவர்களிடம் கொஞ்ச நேரம் விளையாடினால் போதும்... சோர்வு, கவலைகளெல்லாம் காணாமல் போய்விடும்.
உங்கள் கணவர் அன்புமணிக்கு நீங்கள் பாட நினைக்கும் பாடல்?
`` ‘நீ பாதி நான் பாதி கண்ணே’ பாடல்தான் என் கணவர் அன்புமணிக்காக நான் எப்போதும் பாட நினைக்கும் பாடல்.’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...