செய்திகள் :

Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்குமார் கலகல

post image

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.

`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விகடன் டிஜிட்டல் விருதுகள் 2025

Home Cooking Tamil : `Pan இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel | Vikatan Digital Awards 2025

இதில், 'Best Fiction Channel' பிரிவில் 'Madrasi' யூடியூப் சேனலுக்கு வழங்கப்பட்டது. அதிமுகமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார்.

இதையடுத்து ஜெயக்குமார் பேசும்போது, ``எனக்கு எப்பவும் எம்.ஜி.ஆர் பாடல்கள்தான் பிடிக்கும். அதிலும், கருத்துடைய தத்துவப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இப்போது, இந்த டிஜிட்டல் தலைமுறையில் வரும் பாடல்களெல்லாம் மனதில் நிற்பதில்லை.

சோஷியல் மீடியா பல திறமையாளர்களை வெளியில் கொண்டுவந்திருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தி, இளைஞர்கள் சாதனைகள் படைக்க வேண்டும். சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சோஷியல் மீடியா நல்ல திறமையான இளைஞர்களின் கையில் இருக்க வேண்டும்.

நடிகர் கிங்காங், எனக்கு அவர் வீட்டுத் திருமணப் பத்திரிகை வைக்க வந்தபோது அவரை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டேன், அந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. சோஷியல் மீடியாவில் எது போட்டாலும் வைரலாகும். நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்’’ என்றார்.

ஜெயக்குமார்

Vikatan Digital Awards 2025: `நேஷனல் பெர்மிட் மதராஸி!' - Best Fiction Channel Winner - Madrasi

அவரிடம் பட தலைப்பும், அதற்குப் பொருத்தமான அரசியல் தலைவர்களும் என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளும், பதில்களும் இங்கே...

மாமன்னன்?

``பேரறிஞர் அண்ணா.’’

அமைதிப்படை?

தி.மு.க. செந்தில் பாலாஜி, ஓ.பி.எஸ் இரண்டு பேருக்கும் இது பொருந்தும்

தில்லாலங்கடி.?

`உதயநிதி ஸ்டாலின்.’

ஆயிரத்தில் ஒருவன்?

எம்.ஜி.ஆர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்..." - டி.ராஜேந்தர்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: "‘பொல்லதவன்’ படத்தின்போதே சிம்புவுடன் பேசிக்கிட்டிருந்தேன்" -வெற்றிமாறன்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025 - ’’உடைஞ்ச மிக்ஸி ஜார்ல சேமிக்க ஆரம்பிச்சேன்’’ - ஹரீஷ் உருக்கம்!

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025 - "பேரன் பேத்திகள்தான் என் உலகம்" - செளமியா அன்புமணி நெகிழ்ச்சி