நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்
பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!
சீனாவில் பார்வையிழந்த தனது மனைவியை ஒருவர் 12 ஆண்டுகளாக நேசித்து வருவது பலரின் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளது.
சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தில் லி ஜுக்ஸின் (39) என்பவருக்கும், ஜாங் ஸியாங் என்பவருக்கும் 2008 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்த நிலையில், ஜுக்சின் மனைவி ஜாங்குக்கு 2013 ஆம் ஆண்டில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, 2014 ஆம் ஆண்டில் முற்றிலும் பார்வை பறிபோனது. மேலும், இவரின் சிகிச்சைக்காக 500,000 யுவான் (சுமார் ரூ. 61.7 லட்சம்) செலவழிக்கப்பட்டது.

தனது மனைவிக்கு பார்வை பறிபோனாலும், ஒருபோதும் அவரைவிட்டு பிரிய மாட்டேன். வாழ்நாள் முழுவதும் அவருடனேயே இருப்பேன் என்றும் ஜுக்சின் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது வீடு மற்றும் அவர்களின் பணியிடத்திலும் பொருள்கள் எதையும் மறுசீரமைக்கவில்லை. ஏனெனில், அவரின் மனைவிக்காக ஜுக்சின் எதையும் மறுசீரமைக்கவில்லை. அன்றாட வேலைகள் மற்றும் சமையலையும் ஜுக்சினே மேற்கொண்டார்.
இவர்களின் வாழ்க்கை குறித்து அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், ஜுக்சினின் அர்ப்பணிப்பு மற்றும் காதல் குறித்து பலரும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க:பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!