Ilaiyaraja 50: ’நம்மை சேர்த்த இயல்புக்கு நன்றி’ - இளையராஜாவின் பொன்விழாவில் கமல்...
நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்
அரியலூர்: வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள இடத்தில் தமது வாகனத்தின் மேலேறி நின்றபடி மைக் பிடித்த விஜய், தாமதமாக வந்தடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் தமது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசும்போது, “பாஜக செய்வது துரோகம் என்றால், திமுக அரசு நம்மை நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்!
கிட்டத்தட்ட, நானும், நீங்களும், எல்லோரும் சேர்ந்துதான் இவர்கள்(திமுக) நல்லது செய்வார்கள் என்று தேர்ந்தெடுத்தோம்... ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை நமக்கு கொடுத்தார்கள். அவற்றுள் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது?
முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதைவிடுகிறார்... இப்படி கதைவிடுகிறீர்களே எனது அருமை ‘சி.எம். சார்!’
ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற என்று நீங்களே சொல்லிவிட்டு, இப்போது நீங்கள் சொல்வது அனைத்தும் ரீல்ஸ்தான்!
இதற்கு பெயர் நம்பிக்கை மோசடி! மக்களை ஏமாற்றுவதில் இவர்கள் இரண்டு பேரும் ஒரே வகையறாதான்!” என்றார்.
அதன்பின், அனைத்து தரப்பு மக்களையும் சார்ந்துள்ள பிரச்சினைகளைக் குறித்து திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும், அதை அவர்கள் நிறைவேற்றவேயில்லை என்றும் விஜய் சுட்டிக்காட்டிப் பேசினார்.
பாஜகவுடன் மறைமுக உறவை திமுக கொண்டிருப்பது தெளிவாக வெளிப்படுவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க:ஜனநாயகப் படுகொலைச் செய்யும் பாஜக! -அரியலூரில் விஜய்