செய்திகள் :

விஜய் அரியலூர் செல்வதில் தாமதம்!

post image

அரியலூர்: திருச்சியில் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்ட பின், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அரியலூர் வந்தடைந்தார்.

எனினும், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் செல்வதற்கு தாமதமாகி வருகிறது. அங்கு திரளான தொண்டர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க நெடுநேரமாக காத்திருக்கின்றனர். விஜய் அரியலூருக்குச் செல்வதில் தாமதமானதால் அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எப்போதுதான் வரப் போகிறார் என்று முனுமுனுப்பதையும் கேட்க முடிகிறது.

முன்னதாக, திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், அங்கிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியலூா் வந்தார். இதனைத்தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் செல்ல உள்ளார்.

ஜனநாயகப் படுகொலைச் செய்யும் பாஜக! -அரியலூரில் விஜய்

அரியலூர்: வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, ’ஜனநாயகப் படுகொலைச் செய்கிறது பாஜக!' என்று குறிப்பிட்டார். இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த... மேலும் பார்க்க

அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு! -அரியலூரில் விஜய்

அரியலூர்: “அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு!” என்று அரியலூரில் மக்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசினார். திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜ... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு! முதல்வர் வாழ்த்து!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,இந்த... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப... மேலும் பார்க்க

விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்

பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ச... மேலும் பார்க்க

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? விஜய் அடுக்கடுக்கான கேள்வி!

நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்தி... மேலும் பார்க்க