Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்...
ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப காற்று பலூனில் பறக்க விரும்பி எம்.பி. சுதிர் குப்தாவுடன் ஏறினார். ஆனால் பலூனின் கீழ் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உடனே அதை அங்கிருந்த பாதுகாவலர்கள் அணைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மணிக்கு 20 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பலூன் பறக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது பேசிய முதல்வர், “காந்தி சாகர் ஒரு கடல் போன்றது. அது வளமான வனவிலங்குகளையும் இயற்கை பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது.
நான் இங்கே இரவு முழுவதும் தங்கி நீர் விளையாட்டுகளை ரசித்தேன். இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சொர்க்கம். இங்கே எல்லாம் இருக்கும்போது ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? என்றார். முதலமைச்சர் தனது சுற்றுப்பயணத்தில், சம்பல் நீர்ப்பரப்பில் கப்பல் மற்றும் படகு சவாரியையும் அனுபவித்தார்.