நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்
சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!
மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையில், “அரசு ஜிஎஸ்டியை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைத்துள்ளது. இதனால் மணிப்பூர் மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிட்டும். தினசரி பயன்படுத்தும் பொருள்களின் விலை இப்போது குறையும்.
அதேபோல, சிமெண்ட், வீடு கட்டுமானப் பொருள்களின் விலையும் குறையும். இது வளர்ச்சியை ஊக்குவிக்கப் போகிறது” என்றார்.
மத்திய அரசால் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தத்தில், முன்பு 5, 12, 18, 28 (கூடுதலாக சில பொருள்கள் மீது விதிக்கப்பட்ட செஸ் வரி) சதவீதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது 5 சதவீதம் (அத்தியாவசிய மற்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு), 18 சதவீதம் (பிற சரக்கு மற்றும் சேவைகளுக்கு) என எளிதாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிமெண்ட், வீடு கட்டுமானப் பொருள்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.