Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்...
Modi: ’மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்; விரைவில் புதிய விடியல் மலரும்...’ - பிரதமர் மோடி பேச்சு
மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.7500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, "மணிப்பூர் மக்களுக்கு வணக்கம் சொல்லிக் கொள்கிறேன். மணிப்பூர் என்ற பெயரிலேயே ரத்தினம் உள்ளது. இது வரும் காலங்களில் வடகிழக்கில் பொலிவை ஏற்படுத்தும்.
தைரியம் மற்றும் துணிச்சலுக்கு பெயர் பெற்ற இடம் தான் மணிப்பூர். மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன், இது என் வாக்குறுதி.

மணிப்பூரை வன்முறை பாதித்ததில் எனக்கு வருத்தம். விரைவில் மணிப்பூரில் புதிய விடியல் மலரும். அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்.
மணிப்பூரின் வளர்ச்சி பாதையை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மணிப்பூரில் ரயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. புதிய திட்டங்கள் மணிப்பூர் மக்களின் வாழ்வை மேம்படுத்தும்” என்று பேசி இருக்கிறார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!