செய்திகள் :

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

post image

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவற்றையெல்லாம் ரஷியா கண்டுகொள்வதேயில்லை.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. ரஷியாவின் பொருளாதாரத்தில் எண்ணெய் வர்த்தகம் முக்கிய பங்கு வகிப்பதால், அதன் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்தார்.

இருப்பினும், ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடமும் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்குமாறு ஜி7 அமைப்பான கனடா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா, சீனா மீது 50 முதல் 100 சதவிகிதம் வரையில் வரி விதிக்க அமெரிக்கா வலியுறுத்திய நிலையில், இதுகுறித்து ஜி7 அமைப்பு விவாதிக்கவுள்ளது.

இதையும் படிக்க:அமெரிக்க அவுட்சோர்சிங் வரன்முறை மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?

US urges G7 to impose up to 100% tariffs on China and India over Russian oil

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க

சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையி... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீ... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள... மேலும் பார்க்க

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ர... மேலும் பார்க்க