செய்திகள் :

விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கக் கூடாது: தலிபான் தலைவர்

post image

இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாதென தலிபான் தலைவர் பேசியது கவனம் ஈர்த்து வருகிறது.

விராட் கோலி 50 வயதுவரை விளையாட வேண்டுமென்றும் அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36 வயது) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்தாண்டு மே.12ஆம் தேதி அறிவித்தார்.

விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது கடைசி ஐந்து வருட போட்டிகள் இந்த முடிவுக்குக் கொண்டு வந்தது.

விராட் கோலிக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விராட் கோலி 50 வயது வரை விளையாடலாம்

இந்நிலையில், தலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி குறித்து பேசியதாவது:

டெஸ்ட்டில் ரோஹித் ஓய்வு பெற்றது நியாயமானது. ஆனால், விராட் கோலியின் ஓய்வு ஏன் எனத் தெரியவில்லை. உலகத்திலேயே சிலருக்குத்தான் அந்த மாதிரி தனித்தன்மை இருக்கும்.

விராட் கோலி 50 வயது வரை விளையாடலாம் என நினைக்கிறேன்.

இந்திய ஊடகங்களால் விராட் கோலி எரிசல் ஆகியிருக்கலாம். அவருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஜோ ரூட் சச்சின் சாதனையை முறியடிப்பதைப் பார்க்கிறோம் என்றார்.

The Taliban leader's statement that Indian player Virat Kohli should not have retired from Test matches is attracting attention.

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இலங்கை... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

ஆஸ்திரேலியா உள்பட எந்த ஒரு வலிமையான அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியி... மேலும் பார்க்க

இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இலங்கை அணி என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 13) நடைபெறும் போட்டியில் இலங... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்

இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி விளம்பரதாரர் யார்? பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி!

பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா இன்னும் இரண்டு வாரங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கான விளம்பரதாரரை முடிவு செய்யப்படுமென கூறியுள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய அணி விளம்பரதாரர் பெயர் இல்லாமலே விளையாடி வ... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள்: வரலாறு படைத்த இங்கிலாந்து!

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்து வரலாறு படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் இந்த சாதனையை இங்கிலாந்து அணி நிகழ்த்தியது. இதன்மூலம் டி20 தொடர் 1-1 என ச... மேலும் பார்க்க