செய்திகள் :

மணிப்பூர் அமைதிக்காக பாடுபடுவேன்! மோடி வாக்குறுதி!

post image

மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் இனமோதல்கள் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டார்.

மணிப்பூரின் சுராசந்த்பூரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"மணிப்பூர் என்பது நம்பிக்கையின் நிலம். துரதிர்ஷ்டவசமாக, இந்த அழகான பகுதியில் வன்முறை சூழல் ஏற்பட்டுவிட்டது. சற்றுமுன், நிவாரண முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். மணிப்பூரில் நம்பிக்கையின் புதிய விடியல் உதயமாகி வருகிறது என்பதை நம்பிக்கையுடன் சொல்கிறேன்.

வளர்ச்சி வேரூன்ற, அமைதி அவசியம். கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் பல மோதல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களும் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சமீபத்தில் பல்வேறு குழுக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அமைதியின் பாதையில் முன்னேறிச் செல்ல அனைத்து அமைப்புகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நானும் இந்திய அரசும் மணிப்பூர் மக்களுடன் உள்ளன.

மணிப்பூர் மக்களின் வாழ்க்கையில் அமைதியை நிலைநாட்ட நான் உறுதிபூண்டுள்ளேன். இது எனது வாக்குறுதியாகும். வன்முறைகளில் வீடுகளை இழந்த மக்களுக்காக 7,000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்காக அரசு விடுதிகள் கட்டப்படுகிறது. வன்முறை காரணமாக இடம்பெயர்ந்த மக்களை விரைவில் பொருத்தமான இடங்களில் மீள்குடியேற்றுவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

2014 முதல் மணிப்பூரை மேம்படுத்த தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். மணிப்பூர் சாலைகள், ரயில் திட்டங்களில் கவனம் செலுத்துகிறோம். கடந்த சில ஆண்டுகளில், மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ. 3,700 கோடி செலவிடப்பட்டது. புதிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ரூ. 8,700 கோடி செலவிடப்படுகிறது.

ஜிரிபாம் - இம்பால் ரயில் பாதை விரைவில் இந்திய ரயில்வேவுடன் மணிப்பூர் தலைநகரை இணைகும். இதற்காக ரூ.22,000 கோடி செலவிடப்படுகிறது. ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய இம்பால் விமான நிலையம், விமான இணைப்பை மேம்படுத்தும்.

நாம் மிக விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம். நமது மணிப்பூர், நாட்டின் பிற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது. மணிப்பூரில் ஏற்கெனவே 60,000 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. மணிப்பூரில், 7 - 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 25 - 30 ஆயிரம் வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய்கள் இருந்தன. இன்று, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் குழாய்கள் உள்ளன.” என்றார்.

Prime Minister Narendra Modi said on Saturday that he will work for peace in Manipur.

இதையும் படிக்க : மணிப்பூரில் பிரதமர் மோடி!

பருவமழை பேரழிவில் ஹிமாசல்: 386 பேர் பலி, 574 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தைப் புரட்டிபோட்ட பருவமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பலி எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கியதில் ... மேலும் பார்க்க

நொய்டா: கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், மகன் பலி

நொய்டாவில் கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், அவரது 12 வயது மகன் பலியாகினர். உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகரில் உள்ள கட்டடத்தின் 13வது மாடியில் வசித்து வருபவர் சாக்ஷி சாவ்லா (38). ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்டித்து போராட்டம்: உத்தவ் தாக்கரே

துபையில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து மும்பைய... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமரின் உருவப்படத்தை பரிசளித்த சிறுமி!

மணிப்பூரின் சுரசந்த்பூருக்கு முதல்முறையாக வருகை தந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமி ஒருவர் அவரின் உருவப்படத்தை பரிசாக அளித்துள்ளார். மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்... மேலும் பார்க்க

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார்... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமர் மோடி!

மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில... மேலும் பார்க்க