செய்திகள் :

எம்ஜிஆர் படத்தைக் காட்டி அதிமுக தொண்டர்களை யாரும் பிரிக்க முடியாது: செல்லூர் ராஜூ

post image

எம்ஜிஆர் படத்தைக் காட்டி அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு பிரிக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில், நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். பத்திரப்பதிவுத் துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம்.

மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களுடைய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு

அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லுவார். புயல் மையம் கொண்டுள்ளது எனச் சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.

ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள் அது முடியாது. யாராவது கலைஞர் ஆட்சி அமைப்போம் என சொல்கிறார்களா. அதிமுக பற்றிதான் பேசுகிறார்கள் தவிர திமுக பற்றி யாராவது பேசுகிறார்களா.

டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா. உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.

Former AIADMK minister Sellur Raju has said that no one can divide AIADMK workers by showing a photo about MGR.

விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்

பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ச... மேலும் பார்க்க

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? விஜய் அடுக்கடுக்கான கேள்வி!

நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்தி... மேலும் பார்க்க

திருச்சி கூட்டத்தில் மைக் கோளாறு! விஜய் பேசுவது கேட்காமல் திணறல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நடிகர் விஜய், திருச்சியில் இன்று தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கினார். முதல் கூட்டத்தில் பேசத் தொடங்கியதும், அவரது மைக் கோளாறு ஏற்பட்டு, விஜய் பேசுவது புரியாமல்... மேலும் பார்க்க

குற்றங்களே நடக்காத கிராமம்! காவல்நிலையத்தை பார்த்ததே இல்லையாம்!!

நகோன்: நாடு முழுவதும் ஒரு நாளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவது ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றால், பதிவு செய்யப்படாத குற்றங்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம். ஆனால், ஓரிடம் மட்டும் இதில் ... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (12-09-2025) வடக்கு ஆந்திர - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள ... மேலும் பார்க்க

ரெளடி டைம்! என்ன சொல்கிறார் உதயநிதி!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.’ரெளடி டைம்’ எனக் குறிப்பிட்டு, நாயைப் பார்த்து சிரிப்பதைப் போன்ற புகைப்படத்தை இன்ற... மேலும் பார்க்க