செய்திகள் :

Anushka: ``சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலக முடிவு'' - நடிகை அனுஷ்கா அறிவிப்பு

post image

அருந்ததி எனும் மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை உருவாக்கியவர் நடிகை அனுஷ்கா. தொடர்ந்து சிங்கம், பாகுபலி, பாகமதி, ருத்ரமாதேவி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாலிஷெட்டி எனத் தொடர்ந்து தன் நடிப்புக்கான படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார்.

இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது 'காதி'. செப்டம்பர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதே நேரம் அனுஷ்காவின் ஆக்‌ஷன் காட்சிகளும், நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றது.

அனுஷ்கா
அனுஷ்கா

இந்த நிலையில், நடிகை அனுஷ்கா தன் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக நீல ஒளியை விற்கிறேன்.

உலகத்துடன் மீண்டும் இணைவதற்கும், ஸ்க்ரோலிங்கைத் தாண்டி வேலை செய்வதற்கும், சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலகியிருக்க விரும்புகிறேன்.

நாம் அனைவரும் உண்மையில் தொடங்கிய இடத்திற்குச் செல்வோம். நல்ல கதைகளுடன், இதேப் போல அதிக அன்புடனும் விரைவில். எப்போதும் மகிழ்வோடு இருங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், ``நான் முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.

Anushka Shetty - அனுஷ்கா ஷெட்டி
Anushka Shetty - அனுஷ்கா ஷெட்டி

ஒரு வலுவான கதாபாத்திரம் வந்தால், நான் நிச்சயமாக வில்லி வேடத்தில் நடிப்பேன். நான் புதிய ஸ்கிரிப்ட்களைக் கேட்டு வருகிறேன். நல்ல கதைகள் இருக்கின்றன.

தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதுதான் எனது முதல் மலையாளப் படமாக இருக்கும். தெலுங்கிலும் ஒரு புதிய படம் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதுவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்." எனத் தெரிவித்திருந்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Parasakthi: "பராசக்(தீ) பரவட்டும்" - பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் SK | Official Announcement

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் இயக்கநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25-வது படமாக `பராசக்தி' என்... மேலும் பார்க்க

குமாரசம்பவம் விமர்சனம்: அட, இந்த காமெடி நல்லாயிருக்கேப்பா! சம்பவம் செய்திருக்கிறாரா குமரன்?

சென்னையைச் சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்), தன் தாத்தா (ஜி.எம்.குமார்), தாய், தங்கையுடன் பெரிய வீட்டில் வசித்து வருகிறார். இயக்குநராகும் முயற்சியிலிருக்கும் குமரன், தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடு... மேலும் பார்க்க

Vadivelu: ``மக்கள்தான் கடவுள்; உங்க வாழ்த்து என்னைக்கும் வேணும்'' - பிறந்தநாளில் வடிவேலு நெகிழ்ச்சி

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.இன்று (செப். 12) தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் வாழ்... மேலும் பார்க்க