செய்திகள் :

மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!

post image

மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

சுதந்திரத்துக்கு பிறகு மிசோரம் தலைநகரை இந்திய ரயில்வேவுடன் இணைக்கும் முதல் ரயில் பாதை இதுவாகும்.

மிசோரத்தை இந்திய ரயில்வேவுடன் இணைக்கும் பைராபி - சாய்ராங் இடையேயான ரயில் பாதை ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் 45 சுரங்கப்பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 கி.மீ. தூரம் கொண்ட இந்த பாதையில் 88 சிறிய பாலங்களும் உள்ளன.

ஐஸ்வாலில் நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, மிசோரமின் லெங்புய் விமான நிலையத்தில் இருந்தபடி, காணொலி காட்சி வழியாக பைராபி - சாய்ராங் ரயில்வே வழித்தடத்தை தொடங்கிவைத்தார்.

தில்லி, கொல்கத்தா மற்றும் குவஹாத்தியை இணைக்கும் மூன்று விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், மிசோராமில் ரூ. 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

”ஐஸ்வால் இன்று முதல் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐஸ்வால் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது, இன்று, அதை நாட்டு மக்களுக்கு பெருமையுடன் அர்ப்பணிக்கிறேன்.

கடினமான நிலப்பரப்பு உட்பட பல சவால்களைக் கடந்து, இந்த பைராபி - சாய்ராங் ரயில் பாதை ஒரு ஆச்சரியமாக மாறியுள்ளது. நமது பொறியாளர்களின் திறமையும், நமது தொழிலாளர்களின் மனப்பான்மையும் இதனை சாத்தியமாக்கியுள்ளது. முதல் முறையாக, மிசோரமில் உள்ள சாய்ராங் பகுதி ராஜதானி எக்ஸ்பிரஸ் மூலம் தில்லியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Modi inaugurates new railway line in mizoram

இதையும் படிக்க : விஜய் வாகனம் நெரிசலில் சிக்கியது! திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு!

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு ... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள... மேலும் பார்க்க

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ர... மேலும் பார்க்க

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!

தில்லியில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் நேற்று தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மூத்த பெண் மாவோயிஸ்ட் தலைவர் சரண்!

சிபிஐ மாவோயிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் பொதுலா பத்மாவதி தெலங்கானா காவல்துறையிடம் சரணடைந்தார். மறைந்த மாவோயிஸ்ட் தலைவர் மல்லோஜுலா கோட்டேஷ்வர் ராவ் என்கிற கிஷன்ஜியின் மனைவி பத்மாவதி (62) என்ற சுஜாதா சி... மேலும் பார்க்க

மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் வெள்ளிக்கிழமை காலமானார். மூத்த அரசியல் தலைவரும், மேகாலயா முன்னாள் முதல்வருமான டி.டி. லபாங்(93) நீண்ட காலமாக வயது தொடர்பான நோய்களால் பாதிக... மேலும் பார்க்க