எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இருந்து கிழக்கே 111 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 8.03 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவானது. 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் கடற்பரப்பில் ராட்சத அலை உருவாகும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது உயிர் சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக, இதே பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.8 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடல் அலைகள் சுமார் 4 மீட்டர் அளவுக்கு எழுந்தது குறிப்பிடத்தக்கது.