செய்திகள் :

46 நாடுகளுக்குச் சென்றவருக்கு மணிப்பூர் வர நேரமில்லை: பிரதமர் பயணம் குறித்து கார்கே

post image

பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது ஒரு மோசடி நாடகம். வன்முறையால் காயம்பட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய அவமானம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மிசோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பயணம் தொடங்கியிருக்கிறார். மிசோரத்தில் பயணத்தை முடித்துக் கொண்டு மணிப்பூர் சென்றுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய கடுமையான விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர நிறுத்தம் மக்கள் மீதான கருணை அல்ல - இது கேலிக்கூத்து, அடையாளவாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு மிகப் பெரிய அவமானம்.

மணிப்பூருக்கு வரும் மோடி இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சாலைவலம் செல்வதாகக் கூறுவதெல்லாம், ஒன்றுமில்லை, நிவாரண முகாம்களில் இருந்து மணிப்பூர் மக்களின் அழுகுரலைக் கேட்காமல் கோழைத்தனமாகத் தப்பிப்பதே.

684 நாள்களாக வன்முறை.. 300 உயிர்கள் பலி, 67 ஆயிரம் பேர் இடம்பெயர்வு, 1500க்கும் மேற்பட்டோர் காயம்.

இதுவரை 46 வெளிநாட்டுப் பயணங்களை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் சொந்த நாட்டின் குடிமக்களை சந்தித்து, உங்களது அனுதாபத்தை ஓரிரு வார்த்தைகளால் தெரிவிக்க நேரமில்லை.

Your 3-hour PIT STOP in Manipur is not compassion — it’s farce, tokenism, and a grave insult to a wounded people.

இதையும் படிக்க... உலக அழிவுக்கு ஒத்திகைப் பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார்... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமர் மோடி!

மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில... மேலும் பார்க்க

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவின் பெரஹம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார். பிரதமர் மோடியின் வருகைக்கான இறுதித்திட்டம்... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய... மேலும் பார்க்க

இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!

கொச்சி: கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் இறந்த இளைஞரின் இதயம், 13 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை நடக்கும் கொச்சி தனியார் மருத்துவமனைக்கு, சிறுமி, கொல்லத்திலிருந்து வந்தே... மேலும் பார்க்க

பிரதமர்களின் மரபு இதுவல்ல; மோடி முன்பே மணிப்பூர் சென்றிருக்க வேண்டும்! - பிரியங்கா காந்தி

மணிப்பூரில் வன்முறை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி அங்கு செல்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமரிசித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந... மேலும் பார்க்க