செய்திகள் :

முதல் பிரசாரம்: திருச்சியில் தவெக தலைவர் விஜய்! குவிந்த தொண்டர்கள்!

post image

திருச்சி: தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து இன்று தொடங்கவிருக்கிறது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அவருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் மரக்கடைப் பகுதிக்குச் செல்லவிருக்கிறார்.

திருச்சி வரும் விஜயை வரவேற்க விமான நிலையத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் வருகையை முன்னிட்டு, ஏராளமான ரசிகர்களும் ஆதரவாளர்களும் திருச்சி விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து விஜய் இருக்கும் வாகனம் வெளியே வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் பாதையை சூழ்ந்துகொண்டுள்ளனர்.

பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு இன்று காலை 9.40 மணிக்கு வந்தார் விஜய். விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக டி.வி.எஸ். சுங்கச்சாவடி தொடங்கி பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வந்து காலை 10.30 மணிக்கு உரையாற்றவுள்ளாா்.

திருச்சியில் போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. விஜயை காண திருச்சி டோல்கேட் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கும் விஜய், முதல்முறையாக மக்களை சந்திக்கும் தோ்தல் பிரசார பயணத்தை திருச்சியில் தொடங்கவிருப்பதை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் விஜய் தொண்டர்களால் சூழப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், பிரத்யேக பிரசார வாகனத்தில் ஏறி புறப்பட்டார். இந்த வாகனம் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு திருச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தில் விஜயை பார்த்ததும் அவரது தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே வர முற்பட்டதால் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை தடுத்து வருகிறார்கள்.

மரக்கடை பகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறவழிச் சாலை வழியாக அரியலூா் புறப்பட்டு செல்கிறாா் விஜய். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு பெரம்பலூரிலும் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Vijay, who arrived in Trichy by private flight from Chennai, is about to travel to the Marakad area in a special vehicle designed for him.

இதையும் படிக்க... ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா யார்?

எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தார்.கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டியி... மேலும் பார்க்க

விஜய்யைக் காண மின் கம்பங்கள், மரங்களில் ஏறும் தொண்டர்கள்!

தவெக தலைவர் விஜய்யின் எச்சரிக்கையை மீறி, அவரைக் காண்பதற்காக மரங்கள், மின் கம்பங்கள் மீது தொண்டர்கள் ஏறி அமர்ந்துள்ளனர்.தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந... மேலும் பார்க்க

விஜய் வாகனம் நெரிசலில் சிக்கியது! திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்யின் வாகனம் தொண்டர்களின் கூட்டத்துக்கு மத்தியில் சிக்கியது.திருச்சி மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்ற நிலையில்,... மேலும் பார்க்க

உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஆவணப் பட இயக்கநா் கல்யாண் வா்மாவின் இயக்கத்தில் உருவான ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

டெட் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும். தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது. ... மேலும் பார்க்க