செய்திகள் :

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு; முன்னெடுத்த Gen Z போராட்டக்காரர்கள்

post image

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளத் தடைக்கு எதிராக Gen Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் முன் அடிபணிந்த பிரதமர் கே.பி. சர்மா ஒலி கடந்த செவ்வாயன்று பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார்.

அதையடுத்து, இடைக்கால அரசுக்கு தலைமையேற்க அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்கியை (Sushila Karki) போராட்டக்காரர்கள் முன்மொழிந்தனர்.

நேபாள போராட்டம்
நேபாள போராட்டம்

முதலில் போராட்டக்காரர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த சுசீலா கார்கி பின்னர் இடைக்கால அரசுக்கு தலைமையேற்க ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 12) இரவு நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல், சுசீலா கார்கிக்கு பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம், நேபாள அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பை பெற்றார் சுசீலா கார்கி.

இவருடன் இடைக்கால அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால், விரைவில் இடைக்கால அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு சுசீலா கார்கி அதனை வழிநடத்துவார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது வெளிக்கு வந்த ஜெகதீப் தன்கர்' - ஆச்சர்யத்தில் எம்.பி.க்கள்

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சி.பி ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ந... மேலும் பார்க்க

TVK: விஜயின் முதல் பிரசாரம்; திருச்சியைத் தேர்ந்தெடுக்க பின்னணி என்ன? அரசியல் திருப்பம் தருமா?

கடந்த 2008 - ம் ஆண்டு முதல் அரசியலுக்கான காய் நகர்த்தலை செய்து வந்த விஜய், தற்போது த.வெ.க கட்சியைத் தொடங்கி வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வலதுகாலை எடுத்து வைக்க இருக... மேலும் பார்க்க

TVK: திருச்சியில் விஜய் பிரசாரம் - காவல்துறை 23 கட்டுப்பாடுகள்; தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை

த.வெ.க தலைவர் விஜய், இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக காவல்துறை 23 விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதே சமயம், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ... மேலும் பார்க்க

கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்கிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்க... மேலும் பார்க்க

``நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் நடவடிக்கை'' - உச்ச நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்த... மேலும் பார்க்க