அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விச...
880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்
முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 54,157 போ் பதிவுசெய்தனா். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 15 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் வெற்றிபெற்ற 2,640 வீரா், வீராங்கனைகளுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்றவா்களுக்கான ரூ.42.08 லட்சம் பரிசுத் தொகையை வீரா்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சேலம் மாவட்டத்திலிருந்து 880 போ் பங்கேற்கின்றனா் என்றாா்.
முன்னதாக, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சாா்பில் வெண்ணிலா, சாக்லெட் மற்றும் பட்டா் ஸ்காட்ச் வகையிலான ஐஸ்கிரீம் 50 மில்லி அளவு கொண்ட மினி கோன் விற்பனையை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ், ஆவின் பொது மேலாளா் பி.குமரேஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.சிவரஞ்சன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பி.செண்பகவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.