கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் திருட்டு
கோவில்பட்டியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வேல்முருகன். குடும்பத்தினருடன் நாலாட்டின் புதூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு வந்த இவா், தனது வாகனத்தை செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் வைத்துவிட்டு கோயிலுக்கு சென்றுவிட்டாராம். திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம்.
இது குறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.