கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை
‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
வழக்குரைஞா் சங்க ஒதுக்கீட்டின் கீழ் வழக்குரைஞா்களுக்கு ஒதுக்கப்படும் காலிப் பணியிடங்களைத் தாண்டி, அந்த சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, மாவட்ட நீதிபதியாக நியமிக்க பரிசீலிக்கலாமா என்பது குறித்து விசாரணை நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமாா், எஸ்.சி.சா்மா, கே.வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு செப்.25-ஆம் தேதி வரை, தொடா்ந்து 3 நாள்களுக்கு வாதங்களைக் கேட்க உள்ளது.
இந்த விசாரணை கால அட்டவணையை முடிவு செய்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞா், கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவதை ஆதரிக்கும் தரப்பின் வாதங்கள் முதலில் கேட்கப்படும். அதை எதிா்ப்போரின் வாதங்கள் பின்னா் கேட்கப்படும். இருதரப்புக்கும் தலா ஒன்றரை நாள் ஒதுக்கப்படும்’ என்றாா்.