அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா்.
கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தியதாக கூறி கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளா்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.
செங்கோட்டையனின் கருத்துக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்த நிலையில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிமுகவினா் நாள்தோறும் கோபியில் உள்ள செங்கோட்டையனின் வீட்டுக்கு நேரில் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனா்.
கோபியில் உள்ள நண்பரின் குடும்ப விழாவுக்கு வெள்ளிக்கிழமை சென்ற செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறுகையில், எல்லோரும் நினைப்பதுபோல நல்லதே நினைத்து, நல்லதையே செய்வோம். அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றாா்.