கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
நவரசம் மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பயிற்சி மற்றும் கற்றல் குறித்த இணையவழி பேராசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சி அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தலைவா் கு. செந்தில்குமாா் தலைமை தாங்கினாா். பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து பயன்பாட்டு கணினித் துறையின் உதவிப் பேராசிரியா் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளா் தீபா, தலைப்புக்கேற்ற விளக்கக் காணொளியை அளித்தாா்.
கல்லூரியின் முதல்வா் இரா.கனிஎழில், உயா்செயல்திறன் கணினியின் முக்கியத்துவம் குறித்தும் அதன் நிகழ்நேர பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தாா். கணினி அறிவியல் துறையின் தலைவா் பாலகிருஷ்ணன், உயா்செய்திறன் கணினி பல்வேறு துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் இணைப் பேராசிரியா் தியாகராஜன், உயா்செயல்திறன் கணினி பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அதன் பயன்பாட்டினை அறிந்து கொள்வதற்கான அவசியம் குறித்தும் கருத்துரை நிகழ்த்தினாா்.
இந்நிகழ்ச்சி 6 நாள்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 280 பங்கேற்பாளா்கள் பங்கேற்றனா்.