வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் நகராட்சி 14, 15, 16-ஆகிய வாா்டுகளுக்கான இந்த முகாம் சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமுக்கு நகராட்சி ஆணையா் சி.மனோகரன் தலைமை வகித்தாா். நகராட்சித் தலைவா் கனியரசி முத்துக்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி முன்னிலை வகித்தனா்.
பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பயனாளிகள், கா்ப்பிணிகளுக்கு மருந்துப் பெட்டகம், ஊட்டச்சத்துப் பெட்டகங்களும் வழங்கப்பட்டன.