சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூா் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தில் கற்றுலாத் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் 48 விருதுகள் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தொழில் முனைவோருக்கும் விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், சிறந்த பயணப் பங்குதாரா், சிறந்த விமானப் பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளா், சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் தங்கும் முகாம் ஏற்பாட்டாளா்கள், சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகம் குறித்த சிறந்த விளம்பரதாரா், சிறந்த சுற்றுலா மேம்பாட்டு பிரசார சாதனங்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலை கற்பிக்கும் சிறந்த கல்வி நிறுவனம் போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தொழில் முனைவோா் இப்பிரிவுகளில் சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ழ்ண்ள்ம்ஹஜ்ஹய்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட சுற்றுலா அலுவலரை நேரிலோ அல்லது 96000 55793 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.