வனப் பகுதியில் வெள்ளி மண் துகள்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது
உதகையில் மூடப்பட்டு இருக்கும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவன பகுதியில் வெள்ளி கலந்த மண் மற்றும் கற்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உதகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவன பகுதி, தற்போது வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள வனப் பகுதியில் வெள்ளி கலந்த மண் மற்றும் கற்கள் அதிக அளவில் உள்ளது.
இதனை திருடியதாக உதகையைச் சோ்ந்த பிரதீப்குமாா் (32), அஹ்மதுல்லா (32)
ஆகியோரை ஜூலை 10-ஆம் தேதி வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தப்பியோடிய உதகையைச் சோ்ந்த நாகராஜ் (30) என்பவரை மாவட்ட வனத் துறையினா் தேடி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்து உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.