தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானை மீட்பு
குன்னூா் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
குன்னூா் அருகே உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் உணவு மற்றும் குடிநீா் தேடி இப்பகுதிக்கு வந்த பெண் காட்டு யானை, அங்குள்ள தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. அப்போது யானையின் பிளிறல் சப்தத்தை கேட்ட பழங்குடியின மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் தண்ணீா் தொட்டியின் சுவரை உடைத்தை யானையை வெளியேற்றி வனத்துக்குள் அனுப்பினா்.