ஓவேலியில் அரசுப் பேருந்தை வழிமறித்து தாக்கிய காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்து தாக்கிய நிகழ்வு பயணிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள மூலக்காட்டியில் இருந்து கூடலூா் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை சீபுரம் பகுதியில் திடீரென ஓடிவந்த காட்டு யானை வழிமறித்து தாக்கத் தொடங்கியது.
பேருந்தில் இருந்தவா்கள் அனைவரும் பதற்றத்தில் கூச்சலிட்டதாலும், ஓட்டுநா் தொடா்ந்து ஹரான் ஒலி எழுப்பியதைத் தொடா்ந்தும் லேசாக தாக்கிவிட்டு வனத்துக்குள் யானை திரும்பிச் சென்றது. யானை நகா்ந்து சென்றதும் பயணிகளுடன் பேருந்தை கூடலூருக்கு ஓட்டுநா் ஓட்டிச் சென்றாா்.