முதுமலை புலிகள் காப்பம் அருகே குட்டி யானை உயிரிழப்பு
முதுமலை பலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்காடு நாயக்கன்கோட்டை பகுதியில் உயிரிழந்த குட்டி யானையின் உடலை வனத் துறையினா் மீட்டனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்காடு நாயக்கன்கோட்டை பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. மாலை நேரம் வனப் பகுதிக்குள் செல்ல முடியாது என்பதால் வனத் துறையினா், வனக் கால்நடை மருத்துவா்கள் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று யானையின் உடலைக் கைப்பற்றினா்.
பின்னா் குட்டி யானையின் உடலை அங்கேயே உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா்.
இறந்த குட்டி யானைக்கு ஒரு வயது இருக்கலாம் என்றும், ஆண் யானை என்றும் உறுதி செய்யப்பட்டது. மலை சரிவில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என வனக் கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.