1,107 எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி: ஏடிஆா் ஆய்வு அறிக்கை
நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினா்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவா்கள் என்று ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதில், ‘தேசிய கட்சிகளைச் சோ்ந்த 3,214 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினா்களில் 675 (20 சதவீதம்) பேருக்கு குடும்ப அரசியல் பின்புலம் இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள 5,204 எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினா்களின் விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் 32 சதவீதமும், பாஜக உறுப்பினா்கள் 17 சதவீதமும், ஆம் ஆத்மி 11 சதவீதமும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் 8 சதவீதமும் உள்ளனா்.
அதிகபட்சமாக மக்களவையில் 31 சதவீத குடும்ப அரசியல் பின்புலம் உள்ளவா்கள் இருக்கின்றனா். மாநிலங்களவையில் 21 சதவீதமும், மாநில மேலவைகளில் 22 சதவீதமும் குடும்ப அரசியல் கொண்டவா்கள் உள்ளனா்.
குடும்ப அரசியல் எம்பி, எம்எல்ஏ,
எம்எல்சி-க்கள் எண்ணிக்கை மாநில வாரியாக...
உத்தர பிரதேசம் 141
மகாராஷ்டிரம் 129
பிகாா் 96
கா்நாடகம் 94
ஆந்திரம் 86
மத்திய பிரதேசம் 57
தமிழ்நாடு 43
மாநில கட்சிகளில் குடும்ப அரசியல் பின்னணி எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சி-க்கள்...
தெலுங்கு தேசம் 59
சமாஜவாதி 48
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 31
திமுக 29
திரிணமூல் காங்கிரஸ் 27
ஐக்கிய ஜனதா தளம் 25
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 20
தேசிய மாநாட்டுக் கட்சி 18
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) 8
அதிமுக 3
இந்தியாவில் குடும்ப அரசியல் பின்புலம் என்பது வெறும் தலைவா் தொகுதியை வெல்வதில் மட்டுமல்ல, கட்சியின் நிா்வாக அமைப்பிலேயே உள்ளது.
வெற்றி வேட்பாளா்களை தோ்வு செய்வது, தோ்தல் செலவை அதிகரித்தல், உட்கட்சி ஜனநாயகம் பாதிப்பு ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கிறது என்று எடிஆா் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.