கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
ரேபிடோ பெண் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை: மாணவா் கைது
ரேபிடோ பெண் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த 31 வயது பெண், ரேபிடோ இருசக்கர வாகனம் ஓட்டி வருகிறாா். இந்நிலையில், அவா் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்பேட்டிலிருந்து அரும்பாக்கம் எம்எம்டிஏவுக்கு இளைஞரை ஏற்றிச் சென்றாா்.
அப்போது, பின்னால் அமா்ந்திருந்த அந்த இளைஞா், ரேபிடோ ஓட்டுநரான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து வாகனத்தை நிறுத்தி அந்த இளைஞரைக் கண்டித்தபோது, அவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி அமைந்தகரையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் இம்ரான்(19) என்பவரை கைது செய்தனா்.