செய்திகள் :

உ.பி.யில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாய்

post image

உத்தரப் பிரதேசத்தில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், காக் சராய் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரின் மனைவி ரேஷ்மா (25) வியாழக்கிழமை பிரசவ வலியால் பிலிபிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது அவர் இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தார. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.

இந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பூங்காவின் பெஞ்சில் உடலுடன் குடும்பத்தினர் இரவு அமர்ந்திருந்தனர். அப்போது, தெருநாய் ஒன்று அதை தூக்கிக்கொண்டு ஓடியது. உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் நாயை துரத்திச் சென்றன்ர். பின்னர் உடலை சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள புதர்களில் போட்டுவிட்டு தெரு நாய் ஓடியது.

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும் அங்கு தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவத்தை மகளிர் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.

அதேசமயம் இது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நடக்கவில்லை என்றும், ஏனெனில் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து, அவர்கள் அதை வெளியே உள்ள பூங்காவிற்கு கொண்டு சென்றுவிட்டனர் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கீதா அனேஜா கருத்து கூற மறுப்பு தெரிவித்தார்.

In a shocking incident, a stray dog carried away the body of a stillborn baby from the premises of the district medical college here, prompting outrage over the lack of security and safety measures at the hospital.

மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

மணிப்பூர் மாநிலத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) அரசு முறைப் பயணமாகச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வன்முறை ... மேலும் பார்க்க

காத்மாண்டு அருகே ஆந்திர பக்கதர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

காத்மாண்டு அருகே ஆந்திர பக்கதர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பக்தர்கள் காயமடைந்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றுவி... மேலும் பார்க்க

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு

கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் கண்ட்லாவில் இருந்து 80 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பைக்கு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க