சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!
ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி வியாழக்கிழமை இரவு மயக்க நிலையில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
மாணவியை அவரது நண்பர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக ஊழியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாலையில் அவர் தனது வகுப்பு தோழர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததாக மற்றொரு பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்
சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சூழ்நிலைகள் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் மாணவியின் பெயரையும் பல்கலைக்கழக அதிகாரிகள் வெளியிடவில்லை. வளாகத்தில் உள்ள நீர்நிலையின் ஓரத்தில் மயக்க நிலையில் மாணவி மீட்கப்பட்டதாக தகவல் தெரிய வந்ததுள்ளது. இச்சம்பவம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.