சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!
பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவர்போல சித்திரித்த விடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டு பாஜகவை விமர்சித்துள்ளது.
விடியோவில், `தேர்தல்களில் வாக்குகளைப் பெற, தன்னைப் பயன்படுத்துவதாக, பிரதமர் மோடியை ஹீராபென் மோடி விமர்சிப்பதுபோல’ வெளியாகியது.
பிரதமர் மோடியின் தாயார் குறித்த இந்த சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சித்திரிப்பு விடியோ குறித்து பாஜக கூறுகையில்,
``பிரதமர் மோடியின் தாயை காங்கிரஸ் அவமதிப்பு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர் எப்போதும் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்து அரசியலை ஒதுக்கியே வைத்திருக்கிறார்.
இந்த ஏஐ விடியோ மூலம் நாட்டைத் தவறாக வழிநடத்தவும், அனைத்து தாய்மார்களை அவமதிக்கவும் செய்யறிவை (AI) காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தில் பிரதமர் முறையிடுவார்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், விடியோ குறித்த பாஜகவின் கண்டனத்தை மறுத்த காங்கிரஸார், விடியோவில் யாரும் அவமதிக்கப்படவில்லை. தனது குழந்தைக்கு ஒரு தாய் கல்வி கற்பிப்பதைப் பற்றித்தான் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் கடமை. தாய் கல்வி கற்பிப்பதை அவமரியாதை என்று நினைத்தல் கூடாது’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்