சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!
தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கிறது. அதில், கட்டடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்ததும், உயர் நீதிமன்றத்திற்கு விரைந்த போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வெளியேற்றம்!
பின்னர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை மற்றும் மேப்ப நாய் படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை நடைபெற்றது. சமீப காலங்களில் நகரத்தில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளன.
எனவே, மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். முன்னதாக இதேபோன்று இன்று காலை தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.