செய்திகள் :

பிரதமர், ராணுவத் தளபதியைத் தொடர்ந்து.. சீனா சென்ற பாகிஸ்தான் அதிபர்!

post image

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், சமீபத்தில் 5 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, இன்று (செப்.12) முதல் செப்.21 ஆம் தேதி வரை சீனாவில் சுமார் 10 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் முதல் நாளான இன்று, அவர் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரத்துக்கு வருகை தந்துள்ளார். அந்நாட்டில் நடைபெறும் கோல்டன் பாண்டா சர்வதேச கலாசார மன்றத்தின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிச்சுவான் மாகாணம், ஷாங்காய் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி ஆகியவற்றை அவர் பார்வையிடுகிறார். மேலும், இந்தப் பயணத்தில் அந்நாட்டின் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன், சீனா - பாகிஸ்தான் உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கடந்த ஆகஸ்ட் 20 முதல் 22 ஆகிய இருநாள்கள் பாகிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

Pakistani President Asif Ali Zardari has arrived in China on a 10-day state visit.

நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஜென்ஸி என்றழைக்கப்படும் இ... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்கை கொன்றவரை எஃப்பிஐ கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆத... மேலும் பார்க்க

ரகசியமாக இந்தியா வந்து சென்ற தலிபான் அமைச்சர்கள்?

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசின் மூத்த அமைச்சர்கள், ரகசியமாக இந்தியா வந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள்... மேலும் பார்க்க

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

காங்கோவில் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 86 பலியாகினர். காங்கோவின் ஈக்வேடார் மாகாணத்தில் மோட்டார் படகு புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பசன்குஷு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதி... மேலும் பார்க்க

உயிரின் விலை ஒரு புல்லட்! சார்லி கிர்க்கும் சர்ச்சைப் பேச்சுகளும்!

“துப்பாக்கிகள் உயிரைக் காக்கின்றன”..!_ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் கொல்லப்பட்ட நிலையில் அவரின் பழைய எக்ஸ் பதிவுகளும் அவரின் சர... மேலும் பார்க்க

முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர் சுச்சிர் பாலாஜி கொலை செய்யப்பட்டார்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுச்சிர் பாலாஜி மரணம் தற்கொலையல்ல, கொலை என்று தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ... மேலும் பார்க்க