செய்திகள் :

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்கை கொன்றவரை எஃப்பிஐ கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலைக் குற்றவாளி தேடப்பட்ட நிலையில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் டைலர் ராபின்சன் குடும்பத்தினர் கூறுகையில், அவர் சமீபத்திய காலமாகவே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், சார்லி கிர்க் வெறுப்பை மட்டுமே பரப்புவதாகவும் அவர் கூறியதாகத் தெரிவித்தனர்.

சார்லி கிர்க்கை கொல்வதற்காக நீண்டகாலமாக ராபின்சன் திட்டமிட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக யூட்டா மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் கூறுகையில், “அவர் டிஸ்கார்ட் என்னும் குறுஞ்செய்தி செயலியில், அவர் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு ஆடையையும் மாற்றியுள்ளதாக அவரின் அறை நண்பரிடம் பகிர்ந்துள்ளார்.

ஒரு துண்டுக்கு கீழே தன்னுடைய துப்பாக்கி மறைத்து வைத்ததாகவும், ஸ்கோப் பயன்படுத்தி சுட்டதாகவும், தன்னுடைய துப்பாக்கி ‘தனித்துவமானது’ என்றும் குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்” என்றார்.

துப்பாக்கிச் சூடு நடந்த செப்.10 ஆம் தேதி காலை 8.29 மணியளவில் டாட்ஜ் சேலஞ்சர் காரில் ராபின்சன் யூட்டா பல்கலைக்கழகத்திற்கு வந்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அவர் மெரூன் நிற டி-சர்ட், வெளிர் நிற ஷார்ட்ஸ், வெள்ளை லோகோவுடன் கூடிய கருப்பு தொப்பி மற்றும் வெளிர் நிற ஷூக்களையும் அணிந்திருந்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு காவல் அதிகாரிகள் அவரை கண்டறிந்தபோதும் அவர் அதே உடையில் இருந்துள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 11 ஆம் தேதி குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ராபின்சன், கொலை தொடர்பானவற்றை வீட்டில் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே புலன் விசாரணை அதிகாரிகள் ராபின்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்லி கொலை தொடர்பாக 7,000 க்கும் மேற்பட்ட தடயங்களும் குறிப்புகளும் குவிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அமெரிக்காவையே உலுக்கிய இந்தப் படுகொலைக்கான தெளிவான காரணத்தை அதிகாரிகள் இன்னும் குறிப்பிடவில்லை.

Tyler Robinson's plot to kill Charlie Kirk: Hidden rifle, Discord messages, and a change of clothes

இதையும் படிக்க :உயிரின் விலை ஒரு புல்லட்! சார்லி கிர்க்கும் சர்ச்சைப் பேச்சுகளும்!

பிரதமர், ராணுவத் தளபதியைத் தொடர்ந்து.. சீனா சென்ற பாகிஸ்தான் அதிபர்!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், சமீ... மேலும் பார்க்க

நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஜென்ஸி என்றழைக்கப்படும் இ... மேலும் பார்க்க

ரகசியமாக இந்தியா வந்து சென்ற தலிபான் அமைச்சர்கள்?

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசின் மூத்த அமைச்சர்கள், ரகசியமாக இந்தியா வந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள்... மேலும் பார்க்க

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

காங்கோவில் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 86 பலியாகினர். காங்கோவின் ஈக்வேடார் மாகாணத்தில் மோட்டார் படகு புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பசன்குஷு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதி... மேலும் பார்க்க

உயிரின் விலை ஒரு புல்லட்! சார்லி கிர்க்கும் சர்ச்சைப் பேச்சுகளும்!

“துப்பாக்கிகள் உயிரைக் காக்கின்றன”..!_ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் கொல்லப்பட்ட நிலையில் அவரின் பழைய எக்ஸ் பதிவுகளும் அவரின் சர... மேலும் பார்க்க

முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர் சுச்சிர் பாலாஜி கொலை செய்யப்பட்டார்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுச்சிர் பாலாஜி மரணம் தற்கொலையல்ல, கொலை என்று தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ... மேலும் பார்க்க