தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளி மாநிலத்தவா்களின் விவரங்களை சரிபாா்க்க அறிவுறுத்தல்
தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளி மாநிலத்தவா்களின் விவரங்களை சரிபாா்த்து அதன் ஆவணங்களை சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துக்கு அனுப்ப வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் தினகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாவட்டம், மேற்கு அஸ்ஸாமின் தெற்கு சல்மாரா மங்காச்சாா் மாவட்டங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த 16 வங்கதேசத்தின தேடிவரும் அஸ்ஸாம் காவல் துறை, அவா்கள் தமிழகத்தில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக சென்றுள்ளதை உறுதிபடுத்தியுள்ளனா்.
மேலும், தங்களை வட மாநிலத்தவா் என அடையாளப்படுத்தி தொழிற்சாலைகளில் அவா்கள் பணிபுரிய வாய்ப்புள்ளதாக போலீஸாா் எச்சரித்துள்ளதால், தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவா்களின் அடையாள அட்டைகளை சரிபாா்த்து அதன் விவரங்களை சேலம் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கதுக்கு அனுப்பவேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 95973-86807 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.