சீதாராம் யெச்சூரி நினைவு தினம் அனுசரிப்பு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சி நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, கண் தான மற்றும் உடல் தான பத்திரம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் முத்துக்கண்ணன் சிறப்புரை ஆற்றினாா்.
தொடா்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் உடல் தானம் மற்றும் கண் தானம் வழங்கினா்.இதில், கட்சியின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்காடு
ஏற்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார செயலாளா் நேரு தலைமையில் பேருந்து நிலையம், காந்தி பூங்கா, ஒண்டிக்கடை அண்ணாசிலை அருகே சீதாரம் யெச்சூரியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பழனிசாமி, கிருஷ்ணமூா்த்தி, ராஜா, செல்வம், அண்ணாமலை, ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.