ISOBUTANOL - NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் - யாருக்கு லாபம்? | Jagdeep Dhankh...
ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு
கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
குஜராத்தின் கண்ட்லாவில் இருந்து 80 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டது. விமானம் புறப்பட்டவுடன் அதன் ஓடுபாதையில் சக்கரம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இதுகுறித்து விமானிக்கு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையரகம் தகவல் தெரிவித்தது. இருப்பினும், விமானம் தனது முழு பயத்தைத்தையும் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது.
எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரிட்டன்!
தொடர்ந்து, விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் சற்று பதற்றமடைந்தனர். ஒரு கியூ400 விமானத்தில் ஆறு டயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.