ISOBUTANOL - NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் - யாருக்கு லாபம்? | Jagdeep Dhankh...
உலகக் கோப்பைக்குத் தேர்வாகாததன் எதிரொலி: தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம்!
கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத வெனிசுலா, பெரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த முடிவு மிகவும் கடுமையானதாக இருப்பதாக அந்நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்
தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து பத்து அணிகளில் டாப் 6 அணிகள் நேரடியாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகின. அடுத்து 7-ஆவதாக இருக்கும் அணி பிளே-ஆஃப் சுற்றில் மோத வாய்ப்பு கிடைத்துள்ளது.
வெனிசுலா இதுவரை உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத ஒரே தென் அமெரிக்க அணியாக இருக்கிறது.
தனது கடைசி போட்டியில் வென்றிருந்தால் 7-ஆவது இடம் கிடைக்க வாய்ப்பிருந்தபோது 3-6 எனத் தோற்றது. பொலிவியா பிரேசிலை 1-0 என வென்று அந்த இடத்தைப் பிடித்தது.
இந்தக் காரணத்தினால், 20 மாதங்கள் அணியில் இருந்தும் சாதிக்காத, 55 வயதான தலைமைப் பயிற்சியாளர் படிஸ்டா நீக்கப்பட்டுள்ளார்.
பெரு அணி 10 அணிகள் கொண்ட தென் அமெரிக்க அணிகளில் 9-ஆவது இடம் பிடித்தது. சிலி மிகவும் மோசமாக விளையாடி 10-ஆவது இடத்தைப் பிடித்தது.
பெரு அணிக்கு 6 போட்டிகள் மட்டுமே தலைமப் பயிற்சியளாராக இருந்த 58 வயதான ஆஸ்கர் இபனேஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரு அணி கடைசியாக 2018 உலகக் கோப்பையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜென்டீனா, பிரேசில், ஈக்குவாடர், உருகுவே, கொலம்பியா, பராகுவே நேரடியாகத் தேர்வாகி அசத்தின.