சமூக வலைதளங்களில் இருந்து விலகிய அனுஷ்கா!
நடிகை அனுஷ்கா தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவரது நடிப்பில் காட்டி திரைப்படம் கடந்த செப்.5ஆம் தேதி வெளியானது.
கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி சூப்பர் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனது உச்சத்தில் இருந்த அனுஷ்கா சைஸ் ஜீரோ என்ற படத்துக்குப் பிறகு தன் உடல்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டார்.
பாகுபலி படத்தில் அவருக்கு வெற்றிக் கிடைத்தாலும் அவர் தனியாக நாயகியாக நடித்த படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன.
இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் காட்டி (ghaati) என்கிற படம் செப்.5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை அனுஷ்கா கைப்பட எழுதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது:
வணிகத்துக்கான நீல வெளிச்சத்தில் இருந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு மாறுகிறேன். சிறிது காலத்துக்கு சமூக வலைதளத்தில் இருந்து விலகி இருக்கிறேன்.
சமூகவலைதளத்தில் வெறுமனே ஸ்க்ரால் செய்வதை விட்டு நிஜமான உலகத்துடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். நாம் எங்கு தொடங்கினோமோ அங்கேயே செல்ல இருக்கிறேன்.
அதிக கதைகள், கூடுதல் நேசத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். எப்போதும் புன்னகையுடன் இருங்கள். அனுஷ்கா ஹெட்டி எனக் கூறியுள்ளார்.
Love.... always forever ❤️ pic.twitter.com/ALRfMrvpK0
— Anushka Shetty (@MsAnushkaShetty) September 12, 2025