ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
TVK: ``மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது'' - விஜய் சுற்றுப்பயணம் குறித்து ஆதவ் அர்ஜுனா
விஜய் சுற்றுப்பயணம்
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள இருக்கிறார்.

23 நிபந்தனைகளுடன் அனுமதி
மொத்தம் 15 நாள்கள், ஒவ்வொரு வாரச் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, "கொள்கைத் தலைவர்களையும் மாநில உரிமைகளின் முன்னோடிகளையும் கண்ட தமிழ்நாடு, அந்த அடிப்படை அரசியலிலிருந்து விலகிய காலத்தில் எல்லாம் மாபெரும் புரட்சியைக் கண்டது.
1967-ம் ஆண்டின் சாமானிய புரட்சி, 1977-ம் ஆண்டின் சரித்திரப் புரட்சி என்ற வரிசையில் 2026-ம் ஆண்டு மக்கள் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் ஜனநாயகப் புரட்சியைச் சந்திக்க உள்ளது.
கொள்கைத் தலைவர்களையும் மாநில உரிமைகளின் முன்னோடிகளையும் கண்ட தமிழ்நாடு, அந்த அடிப்படை அரசியலிலிருந்து விலகிய காலத்தில் எல்லாம் மாபெரும் புரட்சியைக் கண்டது. 1967-ம் ஆண்டின் சாமானிய புரட்சி, 1977-ம் ஆண்டின் சரித்திரப் புரட்சி என்ற வரிசையில் 2026-ம் ஆண்டு மக்கள் தலைவர் திரு. விஜய்… pic.twitter.com/0GlRoUwWw0
— Aadhav Arjuna (@AadhavArjuna) September 12, 2025
மக்களுக்காக, மக்களில் ஒருவராக, மக்கள் தலைவர் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ள மக்கள் சந்திப்பு, மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது. 'உங்க விஜய் நா வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும்!" என்று தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs