செய்திகள் :

BCCI: ``பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்தல் இருக்காது; ஆனால்'' - IPL தலைவர் கொடுத்த அப்டேட் என்ன?

post image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக 2022 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி, கடந்த ஜூலைவில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

அதனால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்போதைய துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

BCCI
BCCI

இவ்வாறிருக்க, செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால், அக்கூட்டத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சச்சின் டெண்டுல்கர் அடுத்த தலைவராகப் போகிறார் என்ற பேச்சு வெளியானது. ஆனால், சச்சின் தரப்பு அதனை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், தலைவர் பதவி குறித்து ஐ.பி.எல் (IPL) தலைவர் அருண் துமால் புதிய அப்டேட் வழங்கியுள்ளார்.

ஐ.பி.எல் (IPL) தலைவர் அருண் துமல்
ஐ.பி.எல் (IPL) தலைவர் அருண் துமல்

என்.டி.டி.வி (NDTV) ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய அருண் துமால்,

"வேட்புமனு தாக்கல் தொடங்கும். பின்னர் யார் பதவியேற்பார்கள் என்பது நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதில் தேர்தல் நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை.

ஒருமனதாகத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே உறுப்பினர்கள் கூடி ஒரு முடிவெடுக்கட்டும். இப்போதைக்கு அனைவரும் தங்கள் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். அந்தப் பட்டியல் வெளியானதும் யார் எந்தப் பதவியை எடுப்பார்கள் என்பது தெரியவரும்." என்று தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ-க்கு புதிய தலைவராக யார் வரலாம் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்பை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Sachin: `அடுத்த பிசிசிஐ தலைவர் நானா?' - சச்சின் தரப்பு கொடுத்த விளக்கம் என்ன?

சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து சச்சின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பி... மேலும் பார்க்க

ட்ரம்ப்பின் நண்பர் கொலையைத் தொடர்ந்து RCB Ex கேப்டன் எழுப்பிய முக்கிய கேள்வி; என்ன கேட்கிறார்?

அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் கைகளிலும் துப்பாக்கி எளிதாகப் புழக்கத்தில் இருக்கிறது.இந்த ஆபத்தான துப்பாக்கி கலாசாரத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.இத்தக... மேலும் பார்க்க

Sachin: பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் சச்சின் டெண்டுல்கரா... செப்டம்பர் 28-ல் முக்கிய அறிவிப்பு!

முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி கடந்த 2022 அக்டோபரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராகப் பொறுப்பேற... மேலும் பார்க்க

Asia Cup T20: 2.1 ஓவரில் 4 விக்கெட்; மாபெரும் சாதனை படைத்த குல்தீப் யாதவ்!

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை தேர்வு செய்து... மேலும் பார்க்க

IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவம் துபே! | Asia Cup

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் குரூப் A-யிலும், இலங்கை, வங்காள... மேலும் பார்க்க

Rinku: `என் வருங்கால மனைவி அப்போ அழுதாங்க' - வாழ்வை மாற்றிய தருணம் குறித்து நெகிழும் ரின்கு சிங்

ஐபிஎல் வரலாற்றில் கடந்த சில சீசன்களில் ஒரேயொரு போட்டியின் மூலம் ஆல் ஓவர் இந்தியாவுக்கே பேசுபொருளானவர் ரின்கு சிங்.2023-ல் குஜராத் அணிக்கெதிரான அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல... மேலும் பார்க்க